கடலூர் மாநகராட்சி ஆணையருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - மேயருடன் மோதல் எதிரொலியால் பரபரப்பு
கடலூர், 24 செப்டம்பர் (ஹி.ச.) கடலூர் மாநகராட்சியில் நிர்வாக ரீதியாக மேயர் மற்றும் ஆணையர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாநகராட்சி மேயர் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கும், ஆணை
கடலூர் மாநகராட்சி ஆணையருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - மேயருடன் மோதல் எதிரொலியால் பரபரப்பு


கடலூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)

கடலூர் மாநகராட்சியில் நிர்வாக ரீதியாக மேயர் மற்றும் ஆணையர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாநகராட்சி மேயர் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கும், ஆணையர் கிஷன்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த வாக்குவாதத்தின் போது தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆணையர் கிஷன்குமார் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், ஆணையரின் பாதுகாப்பு கருதி உடனடியாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆணையருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் திமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார், ஆளும் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b