காலை உணவில் பல்லி -36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர், 24 செப்டம்பர் (ஹி.ச.) திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 54 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், 36 மாணவர்கள் உணவை சாப்பிட்டதாக கூறப்
Ahmedabad Civil Hospital's big decision


திருவள்ளூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)

திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 54 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், 36 மாணவர்கள் உணவை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சில மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை பரிசோதித்தபோது, அதில் பல்லி இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக உணவு சாப்பிட்ட 36 மாணவர்களையும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி எவ்வாறு வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P