இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு தெரிவித்து உள்ளது. திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (24.9.2026) கா
By Election


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு தெரிவித்து உள்ளது.

திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (24.9.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் அல்ஹாஜ் எம். பஷீர் அஹமது, மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துல்காதர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது திராவிட இயக்கமும் “திராவிட மாடல்” அரசின் மூலம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் சிறுபான்மை மக்களுக்கு ஆற்றிய பணிகளை அடியொற்றி தோழர் ஹாத்தம் அலி அவர்கள் எழுதிய “நல்லிணக்கத்தின் நாயகன் M.K. STALIN” நூல் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வின்போது தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் உடனிருந்தார்.

Hindusthan Samachar / ANANDHAN