பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து - நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கூறி கிறிஸ்தவ மிஷனரி அமைப்புதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எ
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து - நீதிமன்றம் உத்தரவு


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கூறி கிறிஸ்தவ மிஷனரி அமைப்புதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது இந்த பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டி, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான பியூஸ் மனுஷ், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சேலம் நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்தும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b