மத்திய அரசு ஊழியர்களுக்கு நாளை முன்கூட்டியே சம்பளம் - நிதி அமைச்சகம் அதிரடி
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச) வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களின் நடப்பு மாத சம்பளம் நாளையே முன்கூட்டி வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 28 முதல் செப்
Central Government employees to receive salaries early tomorrow


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச)

வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களின் நடப்பு மாத சம்பளம் நாளையே முன்கூட்டி வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை 3 நாட்கள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதால், வங்கி சேவைகள் தடைபடும் நிலையில், ஊழியர்களின் சம்பளப் பட்டுவாடா மற்றும் அன்றாட நிதி பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் அலுவலகங்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி, வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் வழங்கப்படும் சம்பளம், இந்த மாதம் மட்டும் ஒரு நாள் முன்கூட்டியே அதாவது நாளையே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக சம்பளம் தாமதமாவதால் ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b