த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
திருப்பூர், 24 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்
Sathyabama


திருப்பூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்களிடம் தனது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கட்சியின் கொள்கைகள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சத்தியபாமாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தொடர்ந்து இன்று பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு.

பின்னர் அவர் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு, தற்போது சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்த முழுமையான மருத்துவ விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் தாராபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரின் உடல்நிலை குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா ஆகியோருக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீதிமன்றத்தில் இன்று இறுதி தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN