சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
சென்னை , 24 செப்டம்பர் (ஹி.ச) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோள
சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி


சென்னை , 24 செப்டம்பர் (ஹி.ச)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் சிக்னல் கோளாறு காரணமாக சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் கோளாறு காரணமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் காலை நேரத்தில் வழக்கம்போல் பணிக்குச் செல்லும் அலுவலக ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரயில் நிலைய நடைமேடைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் சேவை சீராகும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மார்க்கத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், தாமதத்தைத் தவிர்க்க தற்காலிகமாக மாநகரப் பேருந்துகள் (MTC) அல்லது சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Hindusthan Samachar / vidya.b