அதிரடியாக சரிந்த தங்கத்தின் விலை- நகைப்பிரியர்கள் படுஉற்சாகம்
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,135க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்த
தங்கம்


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,135க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,000க்கும் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P