திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்து நகை பறிப்பு
வயநாடு , 24 செப்டம்பர் (ஹி.ச.) கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன் (56). இவருக்கு நண்பர் மூலம் 55 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்த ந
A


வயநாடு , 24 செப்டம்பர் (ஹி.ச.)

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன் (56). இவருக்கு நண்பர் மூலம் 55 வயது பெண் ஒருவர் அறிமுகமானார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில், நாளடைவில் நெருங்கிப் பழகினர்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது தான் வக்கீல் என்றும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருவதாகவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சுப்பிரமணியன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையையும் தனது தேவைக்காக பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் சுப்பிரமணியன் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததுடன், பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாகவும், அந்த பெண்ணுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், புல்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 5 பவுன் நகையையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பத்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA