மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க வென்றால் ஜனவரிக்குள் ஆட்சி மாற்றம் -ஆர்.எஸ்.பாரதி
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இ.பரந்தாமனின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, “சட்டப்பேரவைக்கு பரந்தாமன் போன்ற ஒருவர் தேவை. அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவை சென்
பாரதி


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இ.பரந்தாமனின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, “சட்டப்பேரவைக்கு பரந்தாமன் போன்ற ஒருவர் தேவை. அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவை சென்றால், அடுத்த 3 மாதங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்வார். மதுராந்தகத்தில் நாம் வெற்றி பெற்றால் ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இடைத்தேர்தல் ஒரு தொகுதியை கைப்பற்றுவதற்கான தேர்தல் மட்டுமல்ல என்றும், தமிழகத்தின் அரசியல் திசையை நிர்ணயிக்கும் தேர்தலாக இதை கருதி திமுக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த 21 நாட்களும் கடுமையாக தேர்தல் பணியாற்றினால் பரந்தாமன் வெற்றி பெறுவார் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவது பரந்தாமன் அல்ல; திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே போட்டியிடுவதாக கருதி கட்சியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்துக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் நீண்டகால அரசியல் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் இ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam