கனிம வளத்தைச் சுரண்டி ரூ.7.48 கோடி அபராதம் -த.வெ.க நிர்வாகிகள் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு, 24 செப்டம்பர் (ஹி.ச.) கனிமவள சுரண்டல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் இருவருக்கு ரூ.7.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை விமர்சித்து எக்ஸ் தளத்
வானதி


தமிழ்நாடு, 24 செப்டம்பர் (ஹி.ச.)

கனிமவள சுரண்டல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் இருவருக்கு ரூ.7.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கருவேலம்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி குவாரி நடவடிக்கைகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் வழக்கில், தவெக நிர்வாகிகள் பாரி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ரூ.7.5 கோடி அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“தூய சக்தியின் ஆட்சி” என்று கூறிக்கொள்ளும் தவெக நிர்வாகிகளின் நிஜ முகத்தை இந்த விவகாரம் வெளிப்படுத்தியுள்ளதாக வானதி சீனிவாசன் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

மேலும், “என் கட்சியினராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் ஊழல் செய்தவர்களை விடமாட்டேன்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டவிரோதமாக கனிம வளங்களைச் சுரண்டி குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கோடிக்கணக்கில் அபராதம் எதிர்கொள்ளும் கட்சி நிர்வாகிகளுக்கும் விஜய் கூறிய அந்த “தூய ஆட்சிக் கொள்கை” பொருந்தாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத கனிம வளச் சுரண்டலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P