மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு சர்ச்சை - பி.டி.ஆரை கடுமையாக சாடிய அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார் என்று தமிழக சட்ட மற்றும் மின்சாரத்
மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு சர்ச்சை - பி.டி.ஆரை கடுமையாக சாடிய அமைச்சர் நிர்மல் குமார்


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார் என்று தமிழக சட்ட மற்றும் மின்சாரத் துறை நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மதுரை கோவிலை கட்டிய பாண்டிய மன்னனை விட, இந்த குடமுழுக்கு விழா குறித்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதிகமாக பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

கோவில் குடமுழுக்கு பணிகள் அனைத்தும் அறங்காவலர் குழுவினரால் முழு சுதந்திரத்துடன், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாரை அறங்காவலர் குழு தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைப்பதற்காக தாம் எந்தவிதமான நெருக்கடியையும் கொடுக்கவில்லை என்றும், அது தொடர்பாக தாம் எந்த வேலையையும் செய்யவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது பணியை சிறப்பாக செய்திருந்தால், அவரை ஏன் நிதியமைச்சர் பதவியில் இருந்து திமுக அரசு நீக்கியது என்றும் கேள்வி எழுப்பிய அமைச்சர் நிர்மல் குமார், திமுகவினரே அவரது செயல்பாட்டில் திருப்தி அடையாதபோது, அவர் மற்றவர்களை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சாடினார்.

Hindusthan Samachar / vidya.b