அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பணியில் தொடர்ந்தேன் - அமைச்சர் கீர்த்தனா
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகும் தொடர்ந்து அரசு பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 9ஆம் தேதி ஹூண்டாய் கூட்டத்தில்
Keerthana


Nb


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகும் தொடர்ந்து அரசு பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

செப்டம்பர் 9ஆம் தேதி ஹூண்டாய் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், 10ஆம் தேதி காலர்போன் பிளேட்டை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

11 முதல் 15ஆம் தேதி வரை படுக்கை ஓய்வில் இருந்ததாகவும், அதன்பிறகு 16ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்துடனான சந்திப்பில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

18ஆம் தேதி வால்கிரீன்ஸ் நிகழ்வு, 20ஆம் தேதி சேலம் மகளிர் கபடிப் போட்டி மற்றும் திருமண நிகழ்வு, 21ஆம் தேதி ஸ்டார்பக்ஸ் ஜிசிசி ஒப்பந்தம், யுபிஎஸ் மற்றும் பெஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனங்களுடனான நிகழ்வுகளில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22ஆம் தேதி காலை உணவுத் திட்ட நிகழ்விலும் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஒருபோதும் அனுதாபத்தையோ, உடல்நிலை குறித்து பாராட்டுகளையோ எதிர்பார்க்கவில்லை என்றும், தனது பணி காரணமாக மீண்டும் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலையை கேலி செய்தவர்கள் தங்களது வீடுகளில் உள்ள பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ