அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) அரசியல் காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தொடர்ந்து நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

அரசியல் காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தொடர்ந்து நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், அவ்வாறு ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த பொது நல வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் தொடர்பாக புதிய சட்டங்களை இயற்றுவது அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் செய்வது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam