பண்ருட்டி அருகே குளத்தில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு - முழுமையாக விசாரிக்க நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நண்பரின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற சபரிகிரி மற்றும் விஷ்வா ஆகிய இரு இளைஞர்கள், இரண்டு நாட்களாக வீடு திரும்பாமல் காணாமல் போன நிலையில், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவ
Neelam


Bb


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நண்பரின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற சபரிகிரி மற்றும் விஷ்வா ஆகிய இரு இளைஞர்கள், இரண்டு நாட்களாக வீடு திரும்பாமல் காணாமல் போன நிலையில், குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இரு இளைஞர்களின் உயிரிழப்புக்கான காரணத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க காவல்துறையும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ