Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச)
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே உள்ள காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் ஒரு வயது குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் எனக் கருதி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் கடந்த பின்னர் குழந்தையின் உடல்நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு மலத்துடன் ரத்தம் வெளியேறியதால் பதறிப்போன பெற்றோர், உடனடியாக குழந்தையை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஒரு வயதே ஆன குழந்தை காய்ச்சலில் இருந்து திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெற்றோரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் குழந்தையின் உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b