பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
பெரம்பலூர், 24 செப்டம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் துறைமங்கலம் பெட்ரோல் பங்க் அரு
விபத்து


பெரம்பலூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் துறைமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, முன்னால் சென்ற ஏ.வி.கே. ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காரில் பயணித்த கார்த்தி (38), பிரபாகரன் (30), காளீஸ்வரன் (25) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கண்ணதாசன், கார்த்தியின் மனைவி சூர்யா, ஜான் கென்னடி, சரண்யா ஆகியோர் படுகாயமடைந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தியின் மனைவி சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம்னி பேருந்தில் பயணித்த 34 பேரும் மாற்றுப் பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது ஏற்பட்ட இந்த கோர விபத்தில் ஒரே குழுவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam