Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்று (செப்டம்பர் 24) அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை ஒட்டியுள்ள ஏனாம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனமழை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஏனாம் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை ஏனாம் பிராந்திய நிர்வாகி சிவ்ராஜ் மீனா பிறப்பித்துள்ளார்.
மழையின் நிலவரத்தை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ