காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள
School


Uhh


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு வகுப்புகள் நடத்துவது மட்டுமின்றி, சுற்றுலா உள்ளிட்ட எந்த காரணங்களுக்காகவும் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதன் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் அல்லது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் கடந்த 23.09.2026 அன்று வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை காலத்தில் இந்த உத்தரவை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ