மதுரையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம்
மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாநகரின் கோச்சடை பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவ
RSS chief Mohan Bhagwat


மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாநகரின் கோச்சடை பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து முக்கிய மாநில, மண்டல மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தற்போதைய அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள், சாகா பயிற்சி வகுப்புகளின் செயல்பாடு, புதிய கிளைகள் தொடங்கப்பட்ட விவரங்கள் குறித்து நிர்வாகிகள் தரப்பில் விளக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

குறிப்பாக, மாநில அளவில் அமைப்பை மேலும் விரிவுபடுத்துவது, இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அமைப்பின் கருத்துக்களை கொண்டு சேர்ப்பது, சமூக சேவை பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் வரவிருக்கும் காலங்களில் நடத்தப்பட உள்ள பயிற்சி முகாம்கள், பொது நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிடல் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோகன் பகவத்தின் இந்த தமிழக வருகை மற்றும் மதுரையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b