பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணை ரத்து- முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதாக தகவல்
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் சுமார்
முதலமைச்சர்


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தங்களது வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தன.

இந்நிலையில், மீனவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அரசாணை ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய பின்னரே இதுகுறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P