வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில்
வார இறுதியை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் வழக்கமாக பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) 1,035 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 780 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இங்கிருந்து தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாளை 210 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 180 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிருந்து மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களும் தலா 145 வீதம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறும் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b