திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு கழிவறை குழாயில் தண்ணீர் பிடித்து சிகிச்சை - விசாரணைக்கு குழு அமைப்பு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச) திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, தூய்மைப் பணியாளர் ஒருவர் கழிவறை குழாயில் தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங
Hos


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச)

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, தூய்மைப் பணியாளர் ஒருவர் கழிவறை குழாயில் தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

விஷம், குறிப்பாக எலி மருந்து அருந்தியதாகக் கூறப்படும் நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விஷ முறிவுக்காக மருந்து கலந்த தண்ணீர் வழங்கப்பட்டபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டு, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ