திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல போலீஸ் தடை? – சாவியை ஒப்படைக்க இஸ்லாமியர்கள் முடிவு
மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா மலை மீது தர்கா அமைந்துள்ளது. இங்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை முறைதாரர்கள் எனப்படும் பூசாரிகள் மாறி பணியாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரத்திற்கான முறைதா
திருப்பரங்குன்றம்


மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா மலை மீது தர்கா அமைந்துள்ளது. இங்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை முறைதாரர்கள் எனப்படும் பூசாரிகள் மாறி பணியாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வாரத்திற்கான முறைதாரரான அத்தார் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், தர்காவில் தங்கியிருப்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் உணவு சமைப்பதற்காக தக்காளி, அரிசி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால், உணவுப் பொருட்களை மலைக்கு எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால், காலை 6 மணிக்கு திறக்கப்பட வேண்டிய தர்கா இதுவரை திறக்கப்படவில்லை.

இதனிடையே, தர்காவில் தங்கியிருந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தர்காவின் சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முறைதாரர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அத்தார் அப்பாஸ் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்காவிற்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam