தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - பிரவீன் சக்கரவர்த்தி
திருச்சி, 24 செப்டம்பர் (ஹி.ச.) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பிகாரில் ஜூன் 2025-ல் தொடங்கியது. 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவு வாக்காளர் பட்டியல்களிலிருந்து 13 கோடிக்கும்
Praveen Chakravarthy


திருச்சி, 24 செப்டம்பர் (ஹி.ச.)

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பிகாரில் ஜூன் 2025-ல் தொடங்கியது.

30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவு வாக்காளர் பட்டியல்களிலிருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் இச்செயல்முறைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் மூலம் பதிலளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டுவிட்டது. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

மறுதேர்தல் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். தலைமை தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அமெரிக்க அதிபரின் அழுத்தத்தால் தான் யூ.பி.ஐ பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசு வரி விதித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த விமர்சனம் குறித்த கேள்விக்கு, மக்கள் பிரச்சனையை குறித்து மட்டும் பேசுவோம் எனக்கு கூறிவிட்டு சென்றார்.

Hindusthan Samachar / ANANDHAN