உளுந்தூர்பேட்டை தியேட்டரில் போதை ஆசாமிகள் ரகளை – ஊழியர்களை சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல்
கள்ளக்குறிச்சி, 24 செப்டம்பர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள தனியார் திரையரங்கில், 3 இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு திரைப்படம் பார்க்க திரையரங்கிற்கு வந்ததாக கூறப்படுகிறது. போதையில் தள்ளாடியபடி உள்ளே செ
தகராறு


கள்ளக்குறிச்சி, 24 செப்டம்பர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள தனியார் திரையரங்கில், 3 இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு திரைப்படம் பார்க்க திரையரங்கிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

போதையில் தள்ளாடியபடி உள்ளே செல்ல முயன்ற அவர்களை திரையரங்கு ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, குடிபோதையில் இருப்பதால் உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை தள்ளிவிட்டு திரையரங்கிற்குள் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை ஊழியர்கள் தடுத்தபோது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது, போதையில் இருந்த 3 பேரும் திரையரங்கு ஊழியர்களை கைகளாலும் கால்களாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார், ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரையரங்கில் போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபட்டு ஊழியர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam