அமெரிக்கா, ஜப்பானிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என பாலியல் சீண்டல் குறித்து பீகார் அமைச்சர் சர்ச்சை கருத்து
பீகார், 24 செப்டம்பர் (ஹி.ச.) பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் கர்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகத்சிங்பூர் பகுதியில் உள்ள அணைக்கட்டு சாலையில் இளம்பெண்ணும் அவருடன் இருந்த இளைஞரும் அப்பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்றபோது, அங்கு வந
பீகார் அமைச்சர்


பீகார், 24 செப்டம்பர் (ஹி.ச.)

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் கர்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகத்சிங்பூர் பகுதியில் உள்ள அணைக்கட்டு சாலையில்

இளம்பெண்ணும் அவருடன் இருந்த இளைஞரும் அப்பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்றபோது, அங்கு வந்த சிலர் அவர்களை சூழ்ந்ததாகவும், இளம்பெண்ணை கையைப் பிடித்து இழுத்து, தலைமுடியைப் பிடித்து துன்புறுத்தியதுடன், ஆபாசமாக பேசியதாகவும் வீடியோவில் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 4 பேரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வீடியோவின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம், பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி சிறுமி மற்றும் சிறுவன் அடங்கிய இருவரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான சம்பவத்தைத் தொடர்ந்து நடந்துள்ளது. அந்த வழக்கிலும் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சமஸ்திபூர் மற்றும் ஜமுய் சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பீகார் அமைச்சர் அசோக் சவுத்ரி, “செய்திகளுக்கு ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை உருவாக்க வேண்டாம்” என எச்சரித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

பீகாரில் சுமார் 14 கோடி மக்கள் வசித்து வருவதாகவும், சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் குற்றச்செயல் புரிபவர்கள், படிப்பறிவற்றவர்கள் மற்றும் நாகரிகமற்றவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேவேளையில், சமஸ்திபூர் சம்பவத்தில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P