Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
கடலூர் மாநகரின் முக்கிய பொதுப் பயன்பாட்டு இடமாக விளங்கும் மஞ்சை நகர் மைதானத்தின் திறந்தவெளித் தன்மையைப் பாதுகாத்து, அது தொடர்ந்து மைதானமாகவே பயன்பாட்டில் இருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் மஞ்சை நகர் மைதானத்தில் எந்தவிதமான நிரந்தரக் கட்டிடங்களும் அமைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான திறந்தவெளி இடங்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மைதானங்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மஞ்சை நகர் மைதானத்தின் பரப்பளவு மற்றும் திறந்தவெளித் தன்மையைப் பாதுகாத்து, அனைத்து தரப்பு மக்களும் தடையின்றி பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மஞ்சை நகர் மைதானம் மக்களுக்கான மைதானமாகவே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ