ராஜினாமா செய்த எம்.எல்.ஏ மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டால் தேர்தல் செலவை டெபாசிட் செய்யக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுத் தொகையை முன்கூட்டியே டெபாசிட் செய்ய வேண்டும் என்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட
ராஜினாமா செய்த எம்எல்ஏ மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டால் தேர்தல் செலவை டெபாசிட் செய்யக் கோரிய வழக்கில்  இன்று தீர்ப்பு


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுத் தொகையை முன்கூட்டியே டெபாசிட் செய்ய வேண்டும் என்ற வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்குகிறது.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் இது தொடர்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சொந்த காரணங்களுக்காக அல்லது அரசியல் ஆதாயத்திற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் நபர்களால் மக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனவே, ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள், அதனால் ஏற்படும் இடைத்தேர்தலுக்கான செலவுத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b