Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 24 செப்டம்பர் (ஹி.ச.)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விராட் கோலி வருகையை அறிந்த ரசிகர்கள் அவரை காண்பதற்காக விமான நிலையத்தில் திரண்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் விராட் கோலி விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஏற்கனவே திருவனந்தபுரம் வந்தடைந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA