Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 03 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 79 ஆயிரத்து 215 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் 36 ஆயிரத்து 740 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 45 லட்சம் இருந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஒரே நாளில் 4 லட்சத்து 45 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 508 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றனர்.
இதற்கிடையே, தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA