பழைய திட்டங்களுக்கு கிரெடிட் பெற கூட்டணி அரசு முயற்சி- ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி
அமராவதி , 03 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திராவில் பாசனத் திட்டங்கள் தொடர்பாக ஆளும் கூட்டணி அரசை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான ‘
A


அமராவதி , 03 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திராவில் பாசனத் திட்டங்கள் தொடர்பாக ஆளும் கூட்டணி அரசை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பாசனத் திட்டங்களுக்கு தற்போதைய கூட்டணி அரசு கிரெடிட் பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

புருஷோத்தபட்டணம் எத்திப்போத்து பாசனத் திட்டத்தின் பம்புகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை போலவரம் திட்டத்தின் நீர் என முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்து வருவதாக ஜெகன் தெரிவித்துள்ளார்.

புருஷோத்தபட்டணம் பம்புகளும், போலவரம் இடது பிரதான கால்வாயும் தற்போதைய கூட்டணி அரசு அமைத்தவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆட்சி காலத்திலேயே போலவரம் இடது பிரதான கால்வாயின் 79 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது புதிதாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மூலம் கிடைக்கும் பலன்களை கூட்டணி அரசு தனது சாதனையாக காட்ட முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் பணத்தை பயன்படுத்தி பாசனத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துவதும், அரசியல் பிரசாரம் செய்வதும் கண்டிக்கத்தக்கது என்றும் ஜெகன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இதுபோன்ற விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA