கோட்டப்பகொண்ட திரிகோடேஸ்வர சுவாமி கோவிலில் அமைச்சர் லோகேஷ் சிறப்பு வழிபாடு
நரசராவுபேட்டை , 03 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பல்நாடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நரசராவுபேட்டை அருகே உள்ள காகாணி ஜே.என்.டி.யூ.கே. என்ஜினீயரிங் கல்ல
A


நரசராவுபேட்டை , 03 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பல்நாடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக நரசராவுபேட்டை அருகே உள்ள காகாணி ஜே.என்.டி.யூ.கே. என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு, சுமார் ரூ.70 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட கௌதமி, கிருஷ்ணவேணி, நாகார்ஜுனா ஆகிய மாணவர் விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து நாரா லோகேஷ், பிரசித்தி பெற்ற கோட்டப்பகொண்டா திருத்தலத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கோவில் கருவறைக்குச் சென்ற அவர், திரிகோடேஸ்வர சுவாமியை தரிசித்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். பூஜைகள் நிறைவடைந்ததும் அர்ச்சகர்கள் அவருக்கு வேத ஆசீர்வாதம் வழங்கி, தீர்த்தம் மற்றும் பிரசாதங்களை வழங்கினர்.

கோட்டப்பகொண்டா திரிகோடேஸ்வர சுவாமியை தரிசித்தது குறித்து நாரா லோகேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கொட்டிபாட்டி ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் லாவு ஸ்ரீகிருஷ்ணதேவராயலு, பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA