சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் – நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாளை செப்டம்பர் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில்கள் வழக்கமான
Chennai Metro


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாளை செப்டம்பர் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்கள் வழக்கமான சேவை நேரமான காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். இதன்படி, பயணிகளின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு நேரங்களில் ரயில்களின் இயக்க இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் 11 மணி வரை: 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை: 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

காலை 5 மணி முதல் 8 மணி வரை: 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை: 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

இரவு 8 மணி முதல் 10 மணி வரை: 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

இரவு 10 மணி முதல் 11 மணி வரை: 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளதால், பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN