Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது.
அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.225 சரிந்து ஒரு கிராம் ரூ.11,720-க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P