Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி குறைந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.
தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இருப்பினும், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்து பாதுகாப்பான நிலை ஏற்பட்ட பின்னரே பரிசல் இயக்கத்திற்கான தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam