4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4,292 கோவில்களின் வரவு-செலவு கணக்குகளுக்கான தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்
Hrce


High court


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4,292 கோவில்களின் வரவு-செலவு கணக்குகளுக்கான தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வருடாந்திர வரவு-செலவு கணக்குகளுக்கான தணிக்கை அறிக்கைகளை அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை தரப்பில், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை 4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ