69-வது பிறந்தநாள் காணும் சத்குருவுக்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து
புதுடெல்லி, 03 செப்டம்பர் (ஹி.ச.) ஆன்மிகத் தலைவரும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். இவர் 1992-ம் ஆண்டு ஈஷா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை
Indian leaders extend birthday wishes to Sadhguru on his 69th birthday.


புதுடெல்லி, 03 செப்டம்பர் (ஹி.ச.)

ஆன்மிகத் தலைவரும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். இவர் 1992-ம் ஆண்டு ஈஷா அறக்கட்டளையை நிறுவினார்.

இந்த அறக்கட்டளை கல்வி, ஆன்மிகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மண் வள பாதுகாப்பிற்காக பல்வேறு பிரச்சாரங்களையும் அவர் முன்னெடுத்துள்ளார்.

ஆன்மிகம் மற்றும் மனிதநேய சேவைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2017-ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சமீபத்தில் காத்மாண்டுவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சத்குரு, இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நேபாள பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளித்தார்.

பலவீனமான மலை சூழல் அமைப்பை பாதிக்கும் பேரிடர்களுக்கு கூட்டாக பதிலளிக்க இமயமலை நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடும் சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு பல இந்திய அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தனது எக்ஸ் தள பதிவில்,

ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், புகழ்பெற்ற ஆன்மிக குருவும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான திரு சத்குரு ஜே.வி. அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் வழிகாட்டுதலும் சமூகத்தில் ஆன்மிக விழிப்புணர்வு, சேவை மற்றும் நல்லிணக்கத்தை விரிவுபடுத்தட்டும். உங்கள் நல்ல உடல்நலத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பாபா மகாகாலிடம் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

மதிப்பிற்குரிய சத்குரு ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்கள் ஆழமான ஞானம், கருணை மற்றும் அயராத முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உள் அமைதி மற்றும் மாற்றத்திற்கான பாதையை தொடர்ந்து ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கு நிறைவான ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளை வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது வாழ்த்துச் செய்தியில்,

சில வாழ்க்கைகள் ஊக்கமளிக்கின்றன. சில பார்வைகள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தையே மாற்றுகின்றன. பத்ம விபூஷண் விருது பெற்றவரும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான பூஜ்ய ஸ்ரீ சத்குரு ஜி அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.

உங்கள் வருங்கால பயணம் எண்ணற்ற உயிர்களை அதிக தெளிவு, நோக்கம் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து தொடட்டும் என்று கூறியுள்ளார்.

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது வாழ்த்தில்,

ஆன்மிக குருவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனருமான பத்ம விபூஷண் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். யோகா, ஆன்மிகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மூலம், இந்தியாவின் வளமான ஆன்மிக பாரம்பரியத்திற்கு உலக அளவில் புதிய அடையாளத்தை அளிக்கும் முக்கிய பணியை சத்குரு ஜி செய்துள்ளார்.

அவரது ஞானம், சிந்தனை மற்றும் மனித நலனுக்கான அர்ப்பணிப்பு தொடர்ந்து சமூகத்திற்கு ஊக்கமளித்து வருகிறது. சத்குரு ஜி நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுள் பெற இறைவன் அருள் புரியட்டும், அவரது வழிகாட்டுதல் மனித நலனுக்கான பாதையை என்றென்றும் வகுக்கட்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b