2 ஆயிரம் கிலோவுக்கும் மேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - குடோனை சீல் வைத்த அதிகாரிகள்
கரூர், 03 செப்டம்பர் (ஹி.ச.) கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை செல்லும் சாலையில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,
Karur


கரூர், 03 செப்டம்பர் (ஹி.ச.)

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை செல்லும் சாலையில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் கரூர் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, KCR பேக்கர்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த குடோனில், பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் கப்புகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குடோனில் இருந்த பிளாஸ்டிக் தயாரிப்பு மூலப்பொருட்கள், பிளாஸ்டிக் கவர்கள், தடை செய்யப்பட்ட டீ கப்புகள், தண்ணீர் கப்புகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மொத்தமாக 2 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த குடோனை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN