மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,700 கன அடியாக குறைவு
சேலம், 03 செப்டம்பர் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்த
மேட்டூர் அணை


சேலம், 03 செப்டம்பர் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 89 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 9,700 கன அடியாக குறைந்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.12 அடியாக உள்ளது. அணையில் தற்போது 55.10 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam