ஊழல் ஆதாரங்களை தேவைப்படும் நேரத்தில் முதல்வர் வெளியிடுவார்– அமைச்சர் வெங்கட்ரமணன்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச) தமிழகத்தில் நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலை
Venkat


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச)

தமிழகத்தில் நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் வழங்கினர்.

இதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். அமுதம் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மூலமும் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக தமிழக அரசு முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது. வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமைச்சர் வெங்கட்ரமணன் கூறுகையில்,

விரைவில் கிராமப்புறங்களுக்கும் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.

2029-ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், பிரதமர் வேட்பாளர் தொடர்பான முடிவுகள் தேர்தல் நேரத்தில் ஆலோசித்து எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை தேவைப்படும் நேரத்தில் முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ