Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 03 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2.5 அடி உயர விலைமதிப்பற்ற மரகத முருகர் சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகத்தில் தொடர்ந்து இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படுவதும், சிலைகள் திருடப்படுவதும் அறநிலையத்துறை மற்றும் காவல்துறையின் தோல்வியை காட்டுவதாக விமர்சித்துள்ளார். கோயில்களில் போதிய பாதுகாப்பு மற்றும் நவீன கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அரசு மெத்தனம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருடப்பட்ட மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க தனிப்படை அமைக்க வேண்டும் என்றும், சிலை கடத்தலின் பின்னணியில் உள்ள சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டம்-ஒழுங்கை சீரமைக்கத் தவறினால் பக்தர்களைத் திரட்டி தமிழக பாஜக சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P