நீட் மூலம் மருத்துவ கனவை நனவாக்கிய கார்த்திகாவுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) NEET மூலம் மருத்துவர் கனவை நனவாக்கிய கூலித் தொழில் செய்யும் பெற்றோரின் மகள், அரசு பள்ளி மாணவி கார்த்திகாவை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எ
Karthika


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

NEET மூலம் மருத்துவர் கனவை நனவாக்கிய கூலித் தொழில் செய்யும் பெற்றோரின் மகள், அரசு பள்ளி மாணவி கார்த்திகாவை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு ஆரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழில் செய்யும் பெற்றோரின் மகள் கார்த்திகா, அரசுப் பள்ளியில் பயின்று NEET தேர்வில் வெற்றி பெற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பில் சேர்ந்துள்ளார்.

2024-25ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்தபோது நடைபெற்ற NEET தேர்வில் அவருக்கு BDS படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தார். அதே காலகட்டத்தில் தனது தந்தையையும் இழந்தார்.

தந்தையை இழந்த நிலையிலும், கூலி வேலை செய்து தனது இரு குழந்தைகளையும் படிக்க வைத்த தாய் கோமதி அவர்களின் தியாகத்தையும், கார்த்திகாவின் விடாமுயற்சியையும் தொடர்ந்து, இந்த ஆண்டு NEET தேர்வில் வெற்றி பெற்று MBBS மருத்துவக் கல்வியில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

மாணவி கார்த்திகாவையும் அவரது குடும்பத்தினரையும் இன்றைய எனது திருநெல்வேலி இல்லத்தில் நேரில் சந்தித்து தமிழ்நாடு பாஜக சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.

கிராமப்புற மாணவர்களின் திறமையையும் விடாமுயற்சியையும் கார்த்திகாவின் வெற்றி வெளிப்படுத்துகிறது.

NEET தேர்வு மூலம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியை அடையும் வாய்ப்பு கிடைக்கிறது.

பொருளாதார வசதி ஒரு தடையாக இல்லாமல், திறமை மற்றும் உழைப்பின் மூலம் மருத்துவக் கனவை நோக்கி முன்னேற இது வாய்ப்பளிக்கிறது என்று மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN