Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
இன்றைய தமிழக சட்டப்பேரவைக்க கூட்டத்தொடரில் தமிழகத்தின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தவும், அரசின் அனைத்து துறைகளையும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கவும் உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அவசியம் என்பதை வலியுறுத்திய முதலமைச்சர் விஜய், இந்த புதிய திட்டம் குறித்த விவரங்களை அவையில் பகிர்ந்து கொண்டார்.
சட்டப்பேரவையில் அவர் கூறுகையில்,
சென்னை ஜார்ஜ் கோட்டை 400 ஆண்டுகள் பழமையானது. 107 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த வளாகத்தில் தமிழக அரசின் பயன்பாட்டுக்காக 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மற்ற இடங்கள் அத்தனையும் பாதுகாப்புத்துறையின் கையில் இருக்கிறது. தலைமைச் செயலகம் ஜார்ஜ் கோட்டை, நாமக்கல் கவிஞர் மாளிகை என இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதனால் சென்னையில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய ஒருங்கிணைந்த வளாகம் உருவாக்கப்படும்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடமாக, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எளிதில் அணுகும் வகையில் இந்த தலைமைச் செயலகம் அமையும்.
தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிருவாக வளாகம் உருவாக்கப்படும் என்றும், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.
என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b