Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 03 செப்டம்பர் (ஹி.ச)
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர்களிடம் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என ஏ.ஐ.எம்.ஐ.எம் தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான் வலியுறுத்தியுள்ளார்.
புதிய நியமனம் என்பது முன்னர் அறக்கட்டளையில் இடம்பெற்றிருந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
முதலில் ஒரு சதி திட்டம் தீட்டப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டது. பின்னர் ராமர் கோயில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதில் இருந்தவர்கள் மிகப்பெரிய மோசடியை நடத்தினர். தங்களின் பக்தி படுகொலை செய்யப்பட்டதாக எனது இந்து நண்பர்களே என்னிடம் கூறினர்.
சிறு மீன்களைப் பிடித்துவிட்டு பெரிய முதலைகளை விட்டுவிடுகிறீர்கள். சம்பத் ராய் எங்கே போனார்? நாட்டு மக்கள் விரிவான விசாரணையை கோருகின்றனர். பாஜக பின்வாங்கியுள்ளது.
புதிய நபர்களை கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம் தான், ஆனால் பழையவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்
என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b