Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 03 செப்டம்பர் (ஹி.ச.)
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேர் இன்று மன்னார் நீதிமன்றத்தில் நான்காவது முறையாக ஆஜர் படுத்தினர்.
மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒன்பது மீனவர்கள் மீதும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில் மன்னார் நீதிமன்ற நீதிபதி 8 மீனவர்களுக்கு தலா ரூ 2.5 லட்சம் இலங்கை பணம் அல்லது 72 ஆயிரம் இந்திய பணம் அபராதம் விதித்தார்.
மேலும் இலங்கை கடற்படையால் இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர் செந்தில் என்பவருக்கு 2.75 லட்சம் இலங்கை பணம் அல்லது 80 ஆயிரம் இலங்கை பணம் அபராதம் விதித்தார்.
இந்த அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்
மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அன்றைய தினம் படகின் உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN