ஹூப்ளி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நவம்பர் வரை நீட்டிப்பு
ராமேஸ்வரம், 03 செப்டம்பர் (ஹி.ச.) ஹூப்ளி – ராமேஸ்வரம் – ஹூப்ளி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை காலம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் எண் 07355 ஹூப்ளி – ராமேஸ்வரம் எக்ஸ்பி
Special trains


ராமேஸ்வரம், 03 செப்டம்பர் (ஹி.ச.)

ஹூப்ளி – ராமேஸ்வரம் – ஹூப்ளி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை காலம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண் 07355 ஹூப்ளி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஹூப்ளியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

இந்த ரயில் அக்டோபர் 4, 11, 18, 25 மற்றும் நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதன்மூலம் மொத்தம் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், ரயில் எண் 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், திங்கட்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த ரயில் அக்டோபர் 5, 12, 19, 26 மற்றும் நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த வழித்தடத்திலும் மொத்தம் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேரம், நிறுத்தங்கள் மற்றும் பெட்டிகளின் அமைப்பிலேயே இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ