Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, பேருந்தில் திடீரென தீப்பற்றி புகை வெளியேறியது.
இதை கவனித்த ஓட்டுநரும், நடத்துநரும் உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பேருந்தின் ஒரு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை.
பேருந்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ