சகோதயா பள்ளி கால்பந்து போட்டி - தி கேம்போர்டு, அக்ஷரம், ஸ்ரீ சக்தி பள்ளிகள் சாம்பியன்
கோவை, 03 செப்டம்பர் (ஹி.ச.) கோயம்புத்தூர் சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில் 47-வது பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் கடந்த ஆக.31 முதல் செப். 2 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. போட்டிகளை பள்ளி முத
A


கோவை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

கோயம்புத்தூர் சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில் 47-வது பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் கடந்த ஆக.31 முதல் செப். 2 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன.

போட்டிகளை பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி துவக்கி வைத்தார்.

இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தாராபுரம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 46 பள்ளிகளிலிருந்து 1,286 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

12 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில்,

அக்ஷரம் சர்வதேசப் பள்ளி முதலிடத்தையும், ஸ்ரீ நாச்சம்மாள் வித்யாவாணி பள்ளி இரண்டாமிடத்தையும், சின்மயா சர்வதேசப் பள்ளி மூன்றாமிடத்தையும், அனன் சர்வதேசப் பள்ளி நான்காமிடத்தையும் பெற்றன.

14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில்,

ஸ்ரீ சக்தி சர்வதேசப் பள்ளி முதலிடத்தையும், தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளி இரண்டாமிடத்தையும், யுவபாரதி பப்ளிக் பள்ளி மூன்றாமிடத்தையும், திருப்பூர் சி.எஸ் அகாடமி நான்காமிடத்தையும் தட்டிச் சென்றன.

மாணவியர் பொதுப் பிரிவில்,

தி கேம்போர்டு சர்வதேசப் பள்ளி முதலிடத்தையும், அகரம் பப்ளிக் பள்ளி இரண்டாமிடத்தையும், யுவா பப்ளிக் பள்ளி மூன்றாமிடத்தையும், ஈரோடு சி.எஸ். அகாடமி நான்காமிடத்தையும் பிடித்தன.

12 வயது பிரிவில், சிறந்த வீரராக ஸ்ரீ நாச்சம்மாள் வித்யாவாணி பள்ளி மாணவன் இனியவன் சிறந்த கோல்கீப்பராக, அக்ஷரம் சர்வதேசப் பள்ளி மாணவன் ரியான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

14 வயது பிரிவில், சிறந்த வீரராக ஸ்ரீ சக்தி சர்வதேசப் பள்ளி மாணவன் மயங்க்லாம்பம் லங்கோம்பா சிங், சிறந்த கோல்கீப்பராக கேம்போர்டு சர்வதேசப் பள்ளி மாணவன் மனன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாணவியர் பிரிசில், சிறந்த வீராங்கனையாக அகரம் பப்ளிக் பள்ளி மாணவி அடலின் ஹனிஷ்கா, சிறந்த கோல்கீப்பராக கேம்போர்டு சர்வதேசப் பள்ளி மாணவி துவாரகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்ற அணிகளுக்குப் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

இப்போட்டிகளை தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த பிரசாந்த் அதிகாரப்பூர்வ பார்வையாளராகப் பார்வையிட்டார். கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த 15 நடுவர்கள் போட்டிகளை வழிநடத்தினர். போட்டி ஆணையரும் தேசிய நடுவருமான சிவ சுப்பிரமணியன் வழிகாட்டுதலில் போட்டிகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டன.

மாணவர்களிடையே ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி அமைந்திருந்ததாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA