Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரும் அரசினர் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று முன்மொழிந்தார்.
இந்தத் தீர்மானம் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ் மொழி வெறும் மொழி மட்டுமல்ல, அது தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்தது என்று குறிப்பிட்டார். நீதி என்பது மக்களுக்குப் புரிகின்ற மொழியில் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே தமிழ் வழக்காடு மொழியாக நடைமுறையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றத்திலும் அதனை விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் தேவை என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்றும், அதுவே சாமானிய மக்களுக்கு நீதி எளிதில் சென்றடைய வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b